கொரோனா நெருக்கடியில் உள்ள இந்தியாவுக்கு ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் அனுப்பி உதவிய சிங்கப்பூர்

இந்தியாவில் சமீபத்திய கோவிட் -19 பரவல் காரணமாக நாடு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது, மருத்துவம் தொடர்பான பொருட்கள் குறைவாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சிங்கப்பூர் இதற்கு உதவும் வகையில், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், BiPAP வென்டிலேட்டர் இயந்திரங்கள் மற்றும் பிற அத்தியாவசிய மருத்துவ பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது.

இதனை Temasek பேஸ்புக் பதிவு மூலம் தெரிவித்துள்ளது.

முதல் தொகுதி மருத்துவ பொருட்கள் இன்று மாலை மும்பையை சென்றடையும் என்று நேற்று மாலை அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், மருத்துவ பொருட்கள் இந்தியாவின் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் கோவிட் -19 சிகிச்சை மையங்களுக்கு கூட்டாளர்களின் உதவியுடன் விநியோகிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button