ஒர்க் பாஸ் அனுமதிக்கான புதிய விண்ணப்பங்களை சிங்கப்பூர் ஏற்காது!

கொரோனா தொற்று பரவல் அபாயம் அதிகமுள்ள நாடுகள் மற்றும் பகுதிகளில் இருந்து ஒர்க் பாஸ் அனுமதிக்கான புதிய விண்ணப்பங்களை சிங்கப்பூர் ஏற்காது என்று தெரிவித்துள்ளது.
கட்டுமானம், கப்பல் போன்ற முக்கிய திட்டம் மற்றும் உள்கட்டமைப்புகளில் பணிபுரிவோருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டு, அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மனிதவள அமைச்சு கூறியுள்ளது.
அதாவது இந்த விதிமுறை, ஆஸ்திரேலியா, புருணை, சீனா, நியூஸிலாந்து, தைவான், ஹாங்காங், மக்காவ் ஆகியவைக்கு பொருந்தாது எனவும் கூறுகிறது அமைச்சு.
ஒர்க் பாஸ் அனுமதியின்கீழ் சிங்கப்பூர் வருவதற்கு முன்னர் அனுமதி பெற்ற ஊழியர்கள் தற்போது வருவதற்கு அனுமதி இல்லை.
இருப்பினும், முன்-அனுமதி பெற்ற வீட்டுப் பணிப்பெண்களுக்கு நுழைவு அனுமதி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது.
ஜூலை 5க்கு முன்னர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி பெற்ற தொற்று அதிக ஆபத்துள்ள இடங்களைச் சேர்ந்த ஒர்க் பாஸ் வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.