சிங்கப்பூரில் வேலை செய்யும் இந்திய ஊழியர்கள் இப்படியும் மோசடி செய்யப்படலாம் – எச்சரிக்கை பதிவு

தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த 45 வயதான ஊழியர் முருகானந்தம் சிங்கப்பூரில் பணியாற்றி வந்துள்ளார். இங்கு பணிபுரியும் போது கிரெடிட் கார்டுகளை அவர் பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சென்ற முருகானந்தம், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் சிங்கப்பூருக்கு வரவில்லை.
அவரை குறிவைத்த மோசடி கும்பல், முருகானந்தம் வாட்ஸ்-அப் நம்பருக்கு கடந்த அக். மாத இறுதியில் கால் செய்துள்ளனர்.
அதில் பேசிய மர்ம கும்பல், சிங்கப்பூர் போலீஸ் பேசுவதாகவும், கிரெடிட் கார்டில் பணம் செலுத்தப்படாமல் இருப்பதாகவும், அதன் காரணமாக விரைவாக பணத்தை செலுத்த வேண்டும் என்றும் ஊழியரிடம் கூறியுள்ளனர்.
உண்மை தன்மையை அறியாமல், முருகானந்தம் தனது மனைவியின் வங்கிக்கணக்கு மற்றும் இணைக் கணக்கு விவரம், மேலும் OTP எண் ஆகியவையை மர்ம நபரிடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர், மனைவி கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்து 98 ஆயிரம் மற்றும் இணை கணக்கிலிருந்து ரூ.2 ஆயிரம் பணத்தை அந்த மர்ம கும்பல் ஆன்லைன் மூலம் மோசடி செய்தது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த ஊழியர் முருகானந்தம், தஞ்சை சைபர் குற்ற போலீஸ் பிரிவில் இதுகுறித்து புகார் செய்தார்.