சிங்கப்பூரில் ஓடவிடப்பட்ட தமிழர் – போலீசில் புகார் கொடுத்து சொந்த ஊர் திரும்பிய கதை

சிங்கப்பூர் வந்த தமிழ்நாட்டின் தஞ்சாவூர், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பிரபல சாமியார் ஒருவர் விரட்டியடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள ஒருவரின் சகோதரருக்கு உடல்நிலை சரியில்லை என்ற அழைப்பின் பேரில் கடந்த 11 ஆம் தேதி சாமியார் சிங்கப்பூர் வந்துள்ளார்.

அவரின் வீட்டுக்கு சென்றால், அங்கே இவரை போல இன்னொரு சாமியார் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார் பட்டுக்கோட்டை சாமியார், இந்த நிலையில் யார் உண்மையான சாமியார் என்பதில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டது.

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் மகன்.. சொந்த ஊரில் தந்தை தூக்கு போட்டு சாவு – என்ன நடந்தது?

திடீரென சிங்கப்பூர் சாமி, அவரின் கழுத்தை துண்டோடு பிடித்து இழுக்கவும் பட்டுக்கோட்டை சாமி என்ன செய்வது என்றறியாது விழி பிதிங்கினார்.

”திருட்டு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கியா” என்றும், “அகோரி” என்றும் ”என் கண்ணை பாரு டா” என சிங்கை சாமி மிரட்ட குட்டிபோட்ட பூனைபோல ஆனார் பட்டுக்கோட்டை சாமி.

இதனை அடுத்து வீட்டின் கதவை திறந்துகொண்டு ஓட்டம் எடுக்க, அதோடு விடாமல் சிங்கப்பூர் சாமி பட்டுக்கோட்டை சாமியின் வேட்டியை பிடிங்கி ஓடவிட்டார்.

இந்நிலையில் பட்டுக்கோட்டை சாமியார் சிங்கப்பூர் போலீசிடம் இது பற்றி புகார் அளித்ததாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியருக்கு அடித்த ஜாக்பாட்: பரிசுத் தொகை S$9,830,000 – “நான் சிங்கப்பூரிலேயே தான் பணியாற்றுவேன்” என கூறும் ஊழியர்

Related Articles

Back to top button