சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழக ஊழியர்: மனைவிக்கு நண்பர் மூலம் சென்ற பொருட்கள்… கடைசியில் வாழ்க்கைக்கே வேட்டு வைத்த நண்பன் – சிறையில் கம்பி எண்ணும் துரோகம்

பெண் ஒருவரின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டுவிடுவேன் என மிரட்டியவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் 34 வயதான சண்முகம் என்பவர் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியை சேர்ந்தவர்.

இவருக்கு 32 வயதான அம்பிகா என்ற மனைவியும் மற்றும் ஒரு மகனும் உள்ளார். இவர் 31 வயதான பிரபாகரன் என்பவர் மூலமாக சிங்கப்பூரில் இருந்து பணம் மற்றும் பொருட்களை அனுப்புவார் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் செம்ம வேலை: சும்மா நடிச்சா போதும், S$1,500 சம்பளம் – உடனே Apply செய்ங்க!!!

பிரபாகரன், அரியலுார் பகுதியை சேர்ந்தவர். இவர் சண்முகம் அனுப்பும் பொருட்களை அம்பிகாவிடம் கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்த கொடுக்கல் வாங்கலில் பிரபாகரனுக்கும் அம்பிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ஒரு நேரத்தில் தனிமையில் இருக்கும் அளவிற்கு சென்றுள்ளது. அவர்கள் ஒன்றாக இருந்ததை போட்டோ எடுத்த பிரபாகரன், அம்பிகாவிடம் அதை காண்பித்து மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

இதனை அடுத்து அம்பிகா பணம் கொடுக்க மறுத்ததால் அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டுவிடுவேன் என்று மிரட்டி உள்ளார் பிரபாகரன்.

இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் அம்பிகா புகார் செய்தார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Related Articles

Back to top button