ஊழியருக்கு பெண் கொடுக்க மறுத்த பெற்றோர் – பல சேசிங் செய்து… காதலியை சிங்கப்பூரில் இருந்து சென்று கரம்பிடித்த ஊழியர்!

சிங்கப்பூரில் வேலைபார்த்து வந்த ஊழியரின் காதலிக்கு தமிழகத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டதை அறிந்த ஊழியர் வேலையை உதறிவிட்டு தமிழகம் பறந்தார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கிருபாகரன் என்ற ஊழியர், இவர் முன்னர் தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அதே நிறுவனத்தில் சிவரஞ்சனியும் என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டு மனதார இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பெண்… தூக்கி சென்று நாசம் செய்த வெளிநாட்டு ஊழியர் – சிறையில் அடைப்பு

கிருபாகரனுக்கு திடீரெனெ சிங்கப்பூரில் வேலை கிடைக்க அவர் பின்னலாடை நிறுவனத்தின் வேலையை விட்டுவிட்டு சிங்கப்பூர் வந்துள்ளார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

இப்படி போய்க்கொண்டு இருக்க, அந்த பக்கம் சிவரஞ்சனிக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர் அவரின் பெற்றோர். மேலும் திருமணத்தை விரைந்து முடிக்கவும் முனைப்பு காட்டியுள்ளனர்.

இது குறித்து சிவரஞ்சனி கிருபாவிடம் தகவல் சொல்ல, அதிர்ச்சியடைந்த அவர் சிங்கப்பூரில் இருந்து அவசரம் அவசரமாக தமிழகம் வந்து சிவரஞ்சனியை கல்யாணம் முடிக்க முடிவு செய்தார்.

கடந்த 5 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் வந்த அவர், அடுத்த நாள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் – விநாயகர் கோவிலில் காதலி சிவரஞ்சனியை திருமணம் செய்துகொண்டார்.

படத்தில் வருவது போல கடுப்பான நம்ம பெண் வீட்டார், வண்டியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு சிவரஞ்சனியை கடத்தி கொண்டு வந்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் கிருபா, புத்தாநத்தம் போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிவரஞ்சனியை மீட்டு தர போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஸ்போர்ட் இப்படி இருந்தா கண்டிப்பா சிறை தான்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து சிக்கிய ஊழியர்

Related Articles

Back to top button