சிங்கப்பூர் சாலையை கடக்க முடியாமல் நின்ற மூதாட்டி; பேருந்தை நிறுத்திவிட்டு ஓடி சென்று உதவிய “தமிழ் ஓட்டுநர்” – குவியும் பாராட்டு

சிங்கப்பூர் சோவா சூ காங்கில், பேருந்து ஓட்டுநர் ஒருவர் வயதான மூதாட்டி சாலையைக் கடக்க உதவுவதற்காக தனது ஓட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கு சென்ற காட்சி அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
டிக்டாக் தளத்தில் அவர் இறங்கி சென்று உதவும் வீடியோ வெளியாகி தீயாக பரவி வருகிறது.
இந்த வீடியோ, சம்பவம் நடந்தபோது பேருந்தில் இருந்த பயணி ஒருவரால் எடுக்கப்பட்டு பின்னர் பகிரப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி பிளாக் 302 சோவா சூ காங் அவென்யூ 4ல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த மூதாட்டி சாலையைக் கடக்கப் போவதைக் கண்டு அவரது பாதுகாப்பில் அக்கறை காட்டியதாக, SMRT பேருந்து ஓட்டுநர் 66 வயதான ராமநாதன் பன்னிர் செல்வம் கூறியுள்ளார்.
அப்போது பேருந்தில் சுமார் 20 பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்தில் இருக்கை கொடுக்க யோசிக்கும் இந்த காலத்தில் இப்படியும் ஒரு மனிதர் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Video : https://www.tiktok.com/@jayden.ojx/video/7128626137973918978