வருமானம் இல்லாமல் கடையை மூடிய தமிழ் ஊழியர்… “6 மாதம் வாடகை வேண்டாம்” என கூறிய நிர்வாகம் – மீண்டும் கடை திறப்பு

சிங்கப்பூரில் கசாங் புத்தே என்னும் வறுகடலை வியாபாரி, கடைசியாக இருந்த கடையை மீண்டும் இயக்குகிறார் என்ற இன்பமான செய்தி வெளியாகியுள்ளது.

கடையை இயக்கி வரும் தமிழ் ஊழியர், 56 வயதான அமிர்தலங்காரம் மூர்த்தி, இன்று (பிப். 27) Peace Centreஇல் வேலையை தொடங்கியதாக கூறினார்.

மூன்றாம் தலைமுறை ஊழியரான அவர் தனது தந்தையிடமிருந்து தொழிலை பெற்று, குடும்ப செய்முறையைப் பயன்படுத்தி கடலை, பருப்பு உணவை கையால் தயாரிக்கிறார்.

கடைக்கான வாடகை S$600 கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கவில்லை என்றாலும் கூட, தொற்றுநோய் காரணமாக அவரின் வியாபாரம் மோசமாக இருந்ததால் இந்த பிப்ரவரி தொடக்கத்தில் தனது கடையை தற்காலிகமாக மூடினார்.

நல்வாய்ப்பாக, கட்டிடத்தின் புதிய நிர்வாகம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அவரது வாடகையை தள்ளுபடி செய்து, அவரின் பாரம்பரிய கடையை மீண்டும் வைக்க அனுமதித்துள்ளது.

அந்த பக்கம் சென்றால் அண்ணன் கடைக்கு சென்று வாருங்கள். தள்ளு வண்டி திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 10:30 முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும்.

Related Articles

Back to top button