சிங்கப்பூரில் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடிய தமிழ் ஊழியர்கள் – நம்முடன் படங்களை பகிர்ந்து மகிழ்வு

சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடிய தமிழ் ஊழியர்கள், அவர்கள் எடுத்துக்கொண்ட படங்களை நம்முடன் பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

உலகம் முழுவதும் நேற்று அக்.24 ஆம் தேதி தீபாவளி சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிங்கப்பூரில் உள்ள தமிழ் உறவுகளும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சொந்த ஊரில், அப்பா அம்மா மனைவி பிள்ளைகள் மற்றும் நண்பர்களோடு கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கப்பெறாத ஊழியர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாரியம்மன் கோவில், முருகன் கோவில் போன்ற வழிபாட்டு தளங்களில் அவர்கள் சிறப்பு பிராத்தனை செய்து நம்முடன் போட்டோக்களை பகிர்ந்து கொண்டனர்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் வசிப்போரும் விடுதிகளில் சிறப்பு பூஜை செய்தனர்.

அந்நாள் போல எந்நாளும் மகிழ்ச்சியாக அமைய தமிழ் டெய்லி டீம் சார்பாக இறைவனை பிராத்திக்கிறோம்.

Related Articles

Back to top button