சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியருக்கு நடந்த சோகம் – கலங்கி நிற்கும் குடும்பம்

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் திரும்பிய ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன், இவர் சிங்கப்பூரில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

பெண்ணிடம் மர்ம உறுப்பை எடுத்து காட்டிய நபர்; வீடியோ வைத்து கைது செய்தது சிங்கப்பூர் போலீஸ்

இந்நிலையில் சரவணன், மனைவி, மகன்கள் அனைவரும் உறவினர் திருமணத்துக்காக குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

சித்தூர் பாலம் அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சரவணன் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

மேலும், மனைவி மற்றும் மகன்கள் உயிருக்கு போராடிய நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சரவணன் சிங்கப்பூரில் இருந்து 2 மாதங்களுக்கு முன்பு தான் சொந்த ஊர் வந்தார் என்பதை அறிந்தனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழ் பணிப்பெண்; ஊழியருடன் முதலாளி வீட்டில் உல்லாசம் – கையும் களவுமாக பிடித்த முதலாளி

Related Articles

Back to top button