சிங்கப்பூர் முதலாளி செட்டில்மென்ட் செய்த 3 லட்சம் சம்பள பாக்கி: போதையில் போட்டு சென்ற ஊழியர் – தமிழக போலீசிடம் நேர்மையாக ஒப்படைத்த மூதாட்டி!

தமிழ்நாடு: சிங்கப்பூர் முதலாளி செட்டில்மென்ட் செய்த ரூ.3 லட்சம் சம்பள பாக்கி பணத்தை தனது சக ஊழியரிடம் இருந்து பெற்று வீடு திரும்பும்போது மது போதையில் அதனை கீழே போட்டு சென்றுள்ளார் ஊழியர் ஒருவர்.

திருப்பத்தூரில் அவர் தவறவிட்ட ரூ.3 லட்சத்தை மீட்டு அப்பகுதி போலீசாரிடம் மூதாட்டி ஒப்படைத்தார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு சொன்ன சம்பளம் வரவில்லையா? வேலையை விட்டு தூக்கிட்டாங்களா? – MOM அறிக்கை

மூதாட்டி கவிதா (62) திருப்பத்தூர் பகுதி தம்பிபட்டி கிராமத்தை சேர்ந்தவர். மூதாட்டி அந்த திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் பழம் வியாபாரம் செய்வதாக கூறப்பட்டுள்ளது.

அந்த பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு நின்றிருந்த ஊழியர், தன்னுடைய மஞ்சள் பையை மது போதையில் கீழே வைத்துவிட்டு அவர் படுத்துள்ளார்.

அதை சிலர் எடுக்க முயன்றதாகவும், அதை கவனித்த மூதாட்டி அதை கைப்பற்றி போலீசிடம் கொண்டு போய் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் அவர் மனைவி துர்காவை விசாரித்த போலீசார், கணவன் பெயர் ராஜா என்றும், அவரின் சிங்கப்பூர் முதலாளி கொடுத்தனுப்பிய சம்பள பாக்கி அது என்றும், தேனியை சேர்ந்த சக ஊழியரிடம் முதலாளி அதை கொடுத்து அனுப்பியதாகவும் கூறினார்.

அதை பெற்று ஊருக்கு வரும் வழியில் இந்த வேலை நடந்ததாக அவர் கூறினார்.

சிங்கப்பூரில் வேலை செய்த தமிழ்நாட்டு தொழிலாளி பரிதாப பலி – நம் சகோதரருக்கு ஆதரவு கரம் நீட்டுங்க

Related Articles

Back to top button