சிங்கப்பூரில் கடை ஒன்றில் கைவரிசை காட்டிய நபர் – முகநூல் மூலம் பாடம் கற்பித்த கடை முதலாளி

சிங்கப்பூரில் ஜெயா ஸ்பைசஸ் கடை உரிமையாளர் ஜெயசீலன் என்பவர், தனது முகநூல் பதிவில் CCTV கண்காணிப்பு கேமராவில் பதிவான தெளிவற்ற படம் ஒன்றை வெளியிட்டார்.
அந்த பதிவில், தனது கடையில் பணத்தை எடுத்தவர் நேரடியாக வந்து மன்னிப்பு கோரி பணத்தை திருப்பி அளித்தால், அந்த சமபவத்தை அப்படியே விட்டு விடுவதாக ஜெயசீலன் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களின் வருகை கட்டுப்பாடு: கட்டுமானத் துறை மட்டும் அல்லாது வேறு சில துறைகளும் பாதிப்பு
அவர் பதிவிட்டிருந்த சம்பவமானது கடந்த 3ஆம் தேதி ஈசூன் பிளாக் 294ல் அமைத்துள்ள இவரது கடையில் அரங்கேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
என்ன நடந்தது?
கடை ஊழியர்கள் வேறு வேளைகளில் ஈடுபட்டு இருந்த நேரத்தில் அங்கு வந்த அந்த நபர் கல்லாவில் கைவிட்டு S$800 பணத்தை எடுத்து சென்றுள்ளார்.
கடை உரிமையாளரின் அந்த பதிவு சமூக ஊடகங்களில் பெரிதும் கவனத்தை ஈர்த்தது.
பதிவிட்ட இரண்டு நாட்களில், கண்காணிப்பு கேமராவில் பதிவான அந்த நபர் ஜெயசீலனை சந்தித்து மன்னிப்பு கோரி பணத்தை திருப்பி அளித்துவிட்டார் என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அவர் எந்த காரணங்களுக்காக இவ்வாறு செய்துள்ளார் என தெரியாமல் போலீசாருக்கு தெரிவித்து அவரின் எதிர்காலத்திற்கு சிக்கல் உண்டாக விரும்பாத காரணத்தால் ஜெயசீலன் இவ்வாறு செய்ததாக கூறியிருந்தார்.
அவரின் இந்த செயல் அனைவரையும் வியக்கும் வகையில் ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் சட்டவிரோதமாக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகத்தில் 158 பேர் மீது விசாரணை