இந்திய பயணிகளுக்கு எல்லை நடவடிக்கைகள் கடுமை – சிங்கப்பூர் நடவடிக்கை

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு COVID-19 எல்லை நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்று சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மோசமான நிலை மற்றும் புதிய வைரஸ் வகைகள் பரவுவதால் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள் அல்லாதோருக்கான நுழைவு அனுமதிகளை சிங்கப்பூர் குறைக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இட வசதிகளில் 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை தொடர்ந்து, அவர்களின் வசிப்பிடத்தில் கூடுதலாக ஏழு நாட்கள் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய நாட்களில் இந்தியாவில் COVID-19 வைரஸ் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடு நாளை (ஏப்ரல் 22) முதல் இரவு 11.59 மணிக்கு நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து வரும் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்ந்து 21 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த நடவடிக்கைகள் வெளிநாடுகளில் இருந்து தொற்றுநோய் பரவும் அபாயங்களைக் குறைத்து பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.