சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த தமிழக தொழிலாளி… கிழிந்த பாஸ்போர்ட் – கைது செய்து வழக்கு பதிவு: உஷார்

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இண்டிகோ விமானம் வந்துள்ளது.
இந்நிலையில், விமான பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர்.
அப்போது, சிங்கப்பூரில் இருந்து வந்த ஊழியர் ஒருவரின் பாஸ்போர்ட் கிழிக்கப்பட்டு இருந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 32 வயதான பிரபாகரன் என்பவரது பாஸ்போர்ட் அது.
பாஸ்போர்ட்டின் 4 பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதனை அடுத்து, பாஸ்போர்ட்டை சேதப்படுத்திய அவர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பிரபாகரனை கைது செய்தனர்.