சிங்கப்பூருக்கு வரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளும் தெரிந்துகொள்ள வேண்டியது – சிறந்த மாற்றம்!
Electronic visit Passes

சிங்கப்பூருக்கு வரும் குறுகிய கால அனைத்து வெளிநாட்டு பயணிகளின் பாஸ்ட்போர்ட்களில் இனி மாற்றம் இருக்கும்.
ஆம், இனி குடிநுழைவு அனுமதிக்கான முத்திரை பாஸ்ட்போர்ட்களில் வைக்கப்பட மாட்டாது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு பாதுகாப்பை வழங்குமா லாரி பயணம்? – நிறுவனங்கள் புலம்புவது ஏன்?
அதற்கு பதில், Electronic visit Passes எனப்படும் மின் வருகை அனுமதிச்சீட்டு வழங்கப்படும்.
இது அனைத்து சோதனை சாவடிகளிலும் மார்ச் 11 முதல் கட்டம் கட்டமாக நடைமுறைக்கு வர உள்ளது.
இந்த தகவல்களை சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனை சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
அந்த அனுமதிச்சீட்டு வழியாக பயணம் தொடர்பான அனைத்து விபரங்களும் வழங்கப்படும்.