திருச்சி விமான நிலையத்தில் இனி 5 மணிநேரம் காத்திருக்க வேண்டும் – கடும் அவதியில் பயணிகள்

சிங்கப்பூர் உட்பட தொற்று பாதிப்பு அதிகம் என்றும் சில நாடுகளை இந்தியா அபாய பட்டியலில் சேர்த்துள்ளது.

அந்த பட்டியலில் உள்ள நாடு­களில் இருந்து இந்­தி­யா வரும் பய­ணி­கள் அனைவருக்­கும் கடுமையான சோதனை கட்டாயம் என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதில், பயணிகளுக்கு விமான நிலை­யங்­க­ளி­லேயே கட்­டாய PCR பரி­சோ­தனை நடத்­தப்­படும் என அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி செல்லும் பயணிகளுக்கு காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது.

பரி­சோ­தனை முடி­வு­களை அறிய சுமார் நான்கு முதல் ஐந்து மணி நேரம் வரை அவர்கள் காத்­தி­ருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

மேலும், அவர்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், திருச்சி விமான நிலைய இயக்குனர் எஸ்.தர்­ம­ராஜ் கூறியுள்ளார்.

கூடுதலாக உறவினர்கள் பயணிகளை அழைத்துச்செல்ல 5 மணிநேரம் தாமதமாக வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button