சிங்கப்பூரில் தொடர்ந்து அதிகரிக்கும் வேலை வாய்ப்புகள்..!

சிங்கப்பூரில் தொடர்ச்சியாக நான்காவது மாதமாக பிப்ரவரி மாதத்தில் வேலையின்மை விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
வேலையின்மை விகிதம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அதிகரித்தது, பின்னர் நவம்பர் முதல் சீராக வீழ்ச்சியடைய தொடங்கியது.
சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு நிலைமை தொடர்ந்து முன்னேறி வருவதாக மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ தெரிவித்துள்ளார்.
மனிதவள அமைச்சகத்தின் அறிக்கையின்படி, ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் பிப்ரவரியில் 3.0 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது ஜனவரி மாதத்தில் 3.2 சதவீதமாக இருந்தது.
சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களைக் குறிக்கும் குடியுரிமை வேலையின்மை, 4.3 சதவீதத்திலிருந்து 4.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மேலும், சிங்கப்பூர் குடிமக்களின் வேலையின்மை விகிதம் 4.5 சதவீதத்திலிருந்து 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் 85,900 சிங்கப்பூர் குடிமக்கள் உட்பட சுமார் 96,800 குடியிருப்பாளர்கள் வேலையில்லாமல் இருந்தனர்.
அது ஜனவரி மாதத்தில் 101,900லிருந்து குறைந்துள்ளது, அவர்களில் 89,300 பேர் சிங்கப்பூர் குடிமக்கள்.