தங்கும் விடுதிகளில் ஐந்தில் ஒரு பங்கு வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களில் ஐந்தில் ஒரு பங்கு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி மே 31 வரையில் சுமார் 55,000 ஊழியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளார் என அமைச்சு தெரிவித்தது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் பேருந்து டிப்போ விபத்தில் ஊழியர் ஒருவர் மரணம்
மேலும், இதில் 67,000 ஊழியர்கள் முதல் டோசை மட்டும் தற்சமயம் போட்டுக்கொண்டுள்ளனர். சுகாதார துறையின் நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி இரண்டாவது டோசை ஆறு முதல் எட்டு வார கால இடைவெளி விட்டு தான் போட்டுக்கொள்ளவேண்டும்.
சிங்கப்பூரின் மக்கள் தொகையில் முப்பது சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுகொண்டுள்ளனர்.
மேலும், 39 வயதுக்குற்பட்டோருக்கான தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு கிருமித்தொற்று – விவரம்