சிங்கப்பூரில் இருந்து இந்த நாட்டுக்கு வருபவர்களுக்கு பரிசோதனை கட்டுப்பாடு நீக்கம் – அதிரடி காட்டிய நாடு!

சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு வரும் பயணிகளுக்கு கோவிட்-19 பரிசோதனை தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.

அதன் பேரில், பயணிகள் மலேசியா வந்த பிறகு தொடர்ந்து ஆறு நாட்களுக்கு தினசரி கோவிட்-19 பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதில்லை என்று மலேசிய சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் லாரிகளில் கொண்டுவரப்பட்ட அதிரடி மாற்றங்கள் – இனி கட்டாயம்!

இது விமானம் மற்றும் தரைவழி VTL ஏற்பாடு வழியாக வரும் பயணிகளுக்கு பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல, லங்காவி சர்வதேச சுற்றுலா பாதுகாப்பு பயண முறை (LITB) மற்றும் குறுகிய கால வணிகர்களுக்கான One Stop Centre (OSC) வழியாக மலேசியாவிற்குள் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் பரிசோதனை தேவை நீக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், மலேசியாவிற்கு வந்த இரண்டாவது, நான்காவது மற்றும் ஆறாவது நாட்களில் கோவிட்-19 சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து 6 நாட்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு தனிமை இல்லா விமான சேவை; திருச்சி, கோவை உள்ளிட்ட இடங்களும் சேர்ப்பு!

Related Articles

Back to top button