இந்தியா to சிங்கப்பூர் விமான சேவை தொடக்கம்: சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 6 விமான சேவை

சிங்கப்பூர் – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையிலான VTL சிறப்பு பயணம் வரும் நவம்பர் 29 அன்று தொடங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மூன்று நகரங்களிலிருந்து ஆறு தேர்ந்தெடுக்கப்பட்ட தினசரி விமானங்களுடன் அந்த சேவை தொடங்கும்.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, இந்திய தலைநகர் டெல்லி மற்றும் மும்பை ஆகிய முக்கிய மூன்று நகரங்களிலிருந்து முதல் சேவை சிங்கப்பூருக்கு தொடங்கப்படும் என CAAS கூறியுள்ளது.
இந்தியாவின் குறுகிய கால வருகையாளர்கள் மற்றும் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் VTL பயண அனுமதிச்சீட்டுக்கான விண்ணப்பங்களை நாளை (நவம்பர் 22) மாலை 6 மணி முதல் பெறலாம்.
இரு நாடுகளுக்கும் இடையே வணிக ரீதியான பயணிகள் விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்தும் இந்தியாவின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும் CAAS தெரிவித்துள்ளது.