சிங்கப்பூரில் மே மாதத்தில் மழை நீடிக்கும்…!

சிங்கப்பூரில் மே மாதத்திற்கான வானிலை பொறுத்தவரை, முதல் பாதியில் வெப்பம் மற்றும் மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான நாட்களில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மதிய வேளைகளில், தீவின் சில பகுதிகளில் மின்னல், இடியுடன் கூடிய குறுகிய கால மழை அடிக்கடி எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த குறுகிய கால மழை சில நாட்களில் மாலை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறுகிறது.

தினசரி வெப்பநிலையை பொறுத்தவரை, 24 டிகிரி செல்சியஸ் முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வெப்பநிலையானது, சில நாட்களில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை எட்டும் என்றும் கூறுகிறது.

Related Articles

Back to top button