வேலையிடம், அலுவலகத்திற்கு திரும்பும் ஊழியர்களுக்கு நீக்குப்போக்கு வேலைமுறை

வேலையிடம் மற்றும் அலுவலகத்திற்கு திரும்பும் பெரும்பான்மையான ஊழியர்களுக்கு நீக்குப்போக்கு வேலைமுறைகளை நிறுவனங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இந்த அணுகுமுறையை பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா நிறுவனங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோவிட்-19 வைரஸ் கட்டுபாடுகள் தளர்த்தப்படும் இந்த நிலையில் ஊழியர்கள் வெவ்வேறு சூழல்களில் பணிபுரியும் வாய்ப்புகள் கொடுப்பது பற்றி நிறுவனங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும்.
ஊழியர்கள் அவர்களின் வீடு மற்றும் அலுவலகம் என மாறி மாறி வேலை செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிக ஊழியர்கள் வேலைக்கு திரும்புவதில் முதலாளிகளுக்கு அதிக மகிழ்ச்சிகள் ஏற்படும்.
இதை நிறுவனங்கள் சிந்தித்து இரு வகையான வேலை முறைகள் ஏற்படுத்துவது சிறப்பு என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.