சிங்கப்பூரில், ஊழியர்களை பணியமர்த்துவதில் சிரமத்தை சந்திக்கும் பத்தில் 6 நிறுவனங்கள்

சிங்கப்பூரில் ஊழியர்களை பணியில் அமர்த்த பத்தில் 6 நிறுவனங்கள் சிரமத்தை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறன் வாய்ந்தவர்கள் பற்றாக்குறை, உலக அளவில் ஒப்பிடுகையில் சுமார் 15 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகரித்திருப்பதாக ManpowerGroup வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஒருவர் மரணம்
அதில் சுமார் பாதி அளவு வேலைகள், தளவாடம் மற்றும் செயல்பாடு தொடர்பானவை என்றும் கூறப்பட்டுள்ளது.
எல்லைகள் மூடப்பட்டிருக்கும் காரணத்தால், தொற்றுக்கு முன்பு இருந்த சூழலை காட்டிலும் வேலைக்கு அமர்த்தாத பொறுப்புகள் ஒரு மடங்கு அதிகரித்திருப்பதாக நிறுவனங்கள் கூறுவதாக செய்தி கூறியுள்ளது.
சிறந்த சம்பளத்தைவிட, நீக்குப்போக்கு வாய்ந்த வேலைகளையும், கற்றல் வாய்ப்புகளையும் இன்றைய ஊழியர்கள் எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தற்போது மனிதவளத் தேவை குறையை போக்குவதாக நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கடை ஒன்றில் கைவரிசை காட்டிய நபர் – முகநூல் மூலம் பாடம் கற்பித்த கடை முதலாளி