சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் தூணுக்கும்-பேருந்துக்கும் இடையே சிக்கி பலி

Singapore Workplace foreign worker death – சிங்கப்பூரில் மேலும் ஒரு வெளிநாட்டு ஊழியர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கிராஞ்சியில் (Kranji) உள்ள ஒரு தனியார் போக்குவரத்து முனையத்தில் பேருந்துக்கும் தூணுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட இழுவை லாரி ஓட்டுநரான அவர் ஆகஸ்ட் 3 அன்று உயிரிழந்தார்.

“என்னை காப்பாற்றுங்கள்” 4 விரல்களை இழந்து கதறும் வெளிநாடு ஊழியர் – டிக்கெட் எடுக்கவே பணம் இல்லை என கண்ணீர் விடும் சோகம்!

இதனுடன் சிங்கப்பூரில் வேலை இடம் தொடர்பான இறப்புகளின் மொத்த எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் Mega auto facility Carros Centre முகவரியான 60 ஜாலான் லாம் ஹுவாட்டில் அமைந்துள்ள முனையத்தில் நடந்துள்ளது.

இந்த விபத்து காலை 11 மணியளவில் நடந்ததாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளித்த மனிதவள அமைச்சகம் (MOM) உயிரிழந்த ஓட்டுநர் 43 வயதான சீன நாட்டவர் என்று கூறியுள்ளது.

அவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தார் என MOM கூறியுள்ளது.

அந்த ஊழியர் Singapore Towing Equipments நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

சிங்கப்பூரில் அந்த மாதிரியான வேலைகளில் பெண்கள்… கஸ்டமருக்கு நல்ல கவனிப்பு; சிக்கிய 7 பெண்கள்

Related Articles

Back to top button