சிங்கப்பூரில் வேலையிடங்களுக்கு திரும்பும் ஊழியர்கள் – முதலாளிகள், ஊழியர்கள் வரவேற்பு!

சிங்கப்பூரில் வேலையிடங்களுக்கு செல்லும் ஊழியர்களின் உச்ச வரம்பு 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் இந்த கட்டுப்பாடு தளர்வுகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இதற்கு முன்னர் 50 சதவீதமாக இருந்த உச்ச அனுமதி தற்போது 75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தளர்வுகளின்கீழ் ஊழியர்கள் வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இணையம் வழியாக பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்றாலும் அது ஒன்றாக சந்தித்து செயல்படுவது போல இருக்காது எனவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்றாக சந்தித்து கொண்ட ஊழியர்கள் தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தி கொண்டனர்.

Related Articles

Back to top button