சென்னை வந்த சிங்கப்பூர் நபரை கொடுமை செய்த போலீஸ்..”அடித்து உன்னை ஜெயிலில் தள்ளுவேன்” என மிரட்டல்

விடுமுறை மகிழ்ச்சியை கொண்டாடும் நோக்கில் முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்த சிங்கப்பூர் நபர் ஒருவர் சந்தித்த இன்னல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சாதாரண உடையில் போலீஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் சில நபர்கள் அவரை கொடுமை செய்துள்ளனர்.

உணவு கேட்டரிங் தோழில் செய்யும் 29 வயதான அன்னில் ரவின் என்ற அந்த நபர், கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 1) தனது குடும்பத்துடன் சென்னை சென்றுள்ளார். அங்கு தனக்கு ஏற்பட்ட வேதனையான அனுபவத்தை டிக்டாக் மூலம் அவர் விவரித்துள்ளார்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் – மீறினால் சிறை

பாஸ்போர்ட் பறிப்பு

ஒரு நிமிடம் நீடித்த அந்த டிக்டாக் வீடியோவில், சிவில் உடை அணிந்த ஒருவர் விமான நிலையத்தில் தனது தாயிடம் வந்து, அவரது பாஸ்போர்ட்டை கொடூரமாக பறித்துக்கொண்டு சென்றுள்ளார்.

அதனை கண்ட அன்னில் அந்த நபரை துரத்திச் சென்று அவரின் கைகளில் இருந்த பாஸ்போர்ட்டைப் பறித்தார்.

பாஸ்போர்ட்டைப் தான் ஏன் அவரிடம் இருந்து பறித்தேன் என்பதை அன்னில் விளக்கினார்; விமான நிலையங்களில் வரியில்லாப் பொருட்களை வாங்குவதற்காக மற்ற பயணிகளின் இது போன்று பாஸ்போர்ட்டைப் பறிக்கும் நிறைய சம்பவங்களை கேள்விப்பட்டதாகக் விளக்கினார் அன்னில்.

“நான் பாஸ்போர்ட்டை பறித்த போது சாதாரண உடையில் இருந்த ஐந்து பேர் என்னைச் சூழ்ந்தனர், அவர்கள் தாம் போலீஸ் என்றும் சொன்னார்கள்,” என அன்னில் ஏசியாஒனுக்கு தொலைபேசியில் கூறினார்.

பெண்ணை ஏமாற்றி சிங்கப்பூர் ஓடிவந்த ஊழியர்… சென்னை விமான நிலையத்தில் அலேக்கா தூக்கிய போலீஸ் – சிறையில் வைத்தே திருமணம்!

அடித்து, சிறையில் அடைப்பேன் என மிரட்டல்

இந்த சம்பவத்தை விரிவாக விவரித்த அன்னில் கூறுகையில்: “என்னை விசாரணைக்கு அழைத்துச் செல்வதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள், அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தி சிறையில் அடைக்கப் போவதாகவும் மிரட்டினார்கள்.”

இருப்பினும், அவர்கள் யாரிடமும் உண்மையில் போலீஸ் தான் என்பதை நிரூபிக்க எந்த அடையாளமும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“அவர்கள் நேர்மையான காவலர்கள் தானா என்பதை நிரூபிக்கும்படி அவர்களிடம் கேட்கவும் எனக்கு மிகவும் பயமாக இருந்தது” என்பதையும் அவர் கூறினார்.

சென்னையில் யாரும் உதவிக்கு வரவில்லை

அந்த நேரத்தில் தான் எப்படி இருந்தேன் என்பதை விவரித்த அன்னில், யாராவது எனக்கு உதவி செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கையில் உதவியின்றி சுற்றிப் பார்த்தது நினைவுக்கு வந்தது, என்றார்.

இறுதியில், அவரது தாயார் அந்த போலீஸ் என்று கூறிய குழுவிடம் மன்னிப்புக் கேட்டு அன்னிலை இழுத்துச் சென்றார்.

மேலும் பிரச்சனையை ஏற்படுத்த விரும்பாததால், இந்த சம்பவத்தை அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்று அன்னில் ஏசியாஒனிடம் தெரிவித்தார்.

தெரியாத ஊர், அறியாத மொழி.. இதுபோன்ற கடும் செயல்களால் தாம் நம் மீதான மதிப்பு குறைந்து வருகிறது.

சிங்கப்பூர் (மட்டும்) தொடர்பான வேலைவாய்ப்புகளை பெற டெலெக்ராம் –
https://t.me/tamildailysg

MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம்; “என்னாச்சு இவர்களுக்கு” – எழுந்து ஓடிய பயணிகள்: Video Viral

 

Related Articles

Back to top button