சிங்கப்பூரில் சுமார் 300 பேரிடம் காவல்துறை விசாரணை!

சிங்கப்பூரில், 16 முதல் 74 வயதுக்குட்பட்ட சுமார் 300 ஆண்களும் பெண்களும் மோசடிகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் விசாரணையில் உள்ளனர்.
இதனை இன்று ஜூன் 5ம் தேதி சிங்கப்பூர் காவல் படை (SPF) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட அதிக தொகை கொண்ட பணப்பை – உரிமையாளரிடம் ஒப்படைக்க போராடிய பெண்!
விசாரணையில் உள்ள சந்தேக நபர்கள் சுமார் 534 மோசடிகளில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது, இதில் முக்கியமாக இ-காமர்ஸ், முதலீடு, வேலை மற்றும் கடன் மோசடிகள், போலி சூதாட்ட தளங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் ஆகியவை அடங்கும்.
மொத்தத்தில், இதில் பாதிக்கப்பட்டவர்கள் S$7 மில்லியன் பணத்தை இழந்துள்ளனர்.
மொத்தம் 193 ஆண்கள் மற்றும் 101 பெண்கள் அடங்கிய இந்த சந்தேக நபர்கள், கடந்த மே 22 முதல் ஜூன் 4 வரை இரண்டு வாரம் தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையில் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் வர்த்தக விவகாரத் துறை மற்றும் ஏழு காவல் நிலப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க : பாலேஸ்டியர் சாலையில் கிரேன் விழுந்து விபத்து – ஓட்டுநர் கைது