சிங்கப்பூரில் பேருந்து டிப்போ விபத்தில் ஊழியர் ஒருவர் மரணம்

SMRT தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் கடந்த ஜூன் 6 அன்று, பேருந்தின்கீழ் பழுதுபார்த்து கொண்டிருக்கும்போது விபத்தில் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று காலை, ஆங் மோ கியோ டிப்போவில் உள்ள ஆட்டோமோட்டிவ் சேவை மற்றும் வர்த்தக பழுதுபார்க்கும் நிலையத்தில் பேருந்து பழுதுபார்க்கும் போது 43 வயதான ஊழியர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க : வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு கிருமித்தொற்று – விவரம்

மேலும், 44 வயதான மற்றொரு ஊழியர் இந்த சம்பவத்தில் காயமடைந்தார்.

6 ஆங் மோ கியோ ஸ்ட்ரீட் 62ல் உதவிக்காக காலை 9.45 மணியளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு படை (SCDF) தெரிவித்துள்ளது.

அந்த இரண்டு பேரையும் கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு SCDF அழைத்துச் சென்றது. ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

இரண்டாவது ஊழியருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இயற்கைக்கு மாறான இந்த மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : வெளிநாட்டு ஊழியர்களின் வருகை கட்டுப்பாடு: கட்டுமானத் துறை மட்டும் அல்லாது வேறு சில துறைகளும் பாதிப்பு

Related Articles

Back to top button