தமிழர்களின் முயற்சியால் கட்டப்பட்ட சிங்கப்பூர் “ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில்” – தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரியது!

சிங்கப்பூரின் சிறப்புமிக்க ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயில் சிங்கப்பூரில் டாங்க் வீதியில் (Tank Road) அமமைந்துள்ளது.

ஓர் அழகான தோற்றத்துடன் கம்பீரமாக காணப்படும் அந்த இந்து மத கோயில், தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக உள்ளது.

இது 1859ஆம் ஆண்டு கட்டப்பட்டது, தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை செட்டியார்களின் முயற்சியில் இது அமைக்கப்பட்டது.

முருகப் பெருமானாகிய தண்டாயுதபாணியே மூலவராக அந்த கோவிலில் இருக்கிறார் என்பது ஐதீகம். அங்கு முதல் திருக்குட நன்னீராடு விழா 1859 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்தது.

பின்னர் 1936 ஆம் ஆண்டு பிப் 2 ஆம் தேதியிலும், அதன் பின்னர் 1955இல் ஜூலை 7ஆம் தேதியிலும் கோயில் திருப்பணி நடந்து, நன்னீராட்டு விழாக்கள் நடைபெற்றன.

சிறப்புகள்:

அங்கு முருகனின் அறுபடை வீடுகள் மண்டபத்தூண்களில் ஆறு சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன.

48 கண்ணாடி மாடங்களில் தெய்வச் சிற்பங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.

அலங்கார மண்டபச் சுவரில் பளிங்குக் கற்களால் அமைந்த வண்ண மயில் வடிவம் ஒன்றிருக்கிறது.

ஆனந்தத் தாண்டவ நடராஜரும், மாணிக்கவாசகரும் சிவகாமி அம்மையும் கதை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button