சிங்கப்பூரில் நிறுவனத்தின் தவறால் உயிரிழந்த தமிழக கட்டுமான ஊழியர் – நிறுவனத்திற்கு S$250,000 அபராதம்

சிங்கப்பூரில் பணிபுரிந்த தமிழக கட்டுமான ஊழியர் ஒருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சுமார் 8 மீட்டர் உயரத்தில் உள்ள லிஃப்ட் பிளாட்பாரத்தில் மின் வேலை செய்து கொண்டிருந்தபோது கிரேன் மோதியதில் அது திடீரென கவிழ்ந்தது. அப்போது 22 வயதான திரு கலியபெருமாள் மணிகண்டன் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார்.

கட்டுப்பாடு இல்லாமல் கிரேன் இயக்கம்

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர்கள் எதையும் பொருட்படுத்தாமல் சுதந்திரமாக கிரேனைப் பயன்படுத்தியது Fusion Builders நிறுவனத்தின் இயக்குநரான Ng Chin Sangக்கு தெரிந்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் முறையாக பயிற்சி பெறாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் தொழிலதிபர் வீட்டில் மர்ம கும்பல் வேட்டை

அபராதம்

72 வயதான சிங்கப்பூரர் Ng, பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தின் கீழ் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு S$60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் அவரது நிறுவனத்திற்கு S$250,000 அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வேலை பெற வேண்டி தில்லாலங்கடி செயலில் ஈடுபட்ட ஊழியர்; “இரக்கமே கிடையாது…சிறை தான்” – MOM கறார்

விபத்து எப்படி நடந்தது?

22 துவாஸ் அவென்யூ 6ல் நான்கு மாடி தொழிற்சாலை பிளாக்கை அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள பட்டறையில் கட்டுமான பணிக்காகவும் ஃப்யூஷன் பில்டர்ஸுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு ஜூன் 6 அன்று, திரு கலியபெருமாள் சுமார் 7.7 மீ உயரத்தில் சிசர் லிஃப்ட் மூலம் மூன்றாவது மாடி சுவரில் பொருத்தப்பட்ட கேபிள் ட்ரேயில் மின்சார கேபிளிங் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், மற்ற ஊழியர்கள் கிரேன் மூலம் குப்பை பைகளை முதல் மாடிக்கு கொண்டு சென்றனர். அப்போது கிரேன் மோதியதில் லிஃப்ட் திடீரென கவிழ்ந்து அவர் உயிரிழந்தார்.

சிங்கப்பூரில் கனமழை: லாரி மீது முறிந்து விழுந்த பெரும் மரம் – லாரி ஊழியர்களின் நிலை?

Related Articles

Back to top button