இந்திய ஊழியரை அடித்து தாக்கிய ஓட்டுநர் – “பாதுகாப்பா வாகனம் ஓட்டு பா” என்று சொன்னதற்கு கிடைத்த வெகுமதி

ஜூரோங்கில் உள்ள தளவாட நிலையத்தில் வெளிநாட்டு ஊழியர் ஒருவர் கடந்த வியாழன் (அக். 13) அன்று தாக்கப்பட்டார்.

பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாமல் லாரி ஓட்டுநர் வாகனத்தை இயக்கியது குறித்து பாதுகாப்பு ஊழியரான அவர் கூறியதால் தாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ்யை “குஜராத் அரசு மருத்துவமனை” என ட்வீட் – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்திருப்பதாக பாதுகாப்பு ஊழியர்களின் சங்கம் (USE) பேஸ்புக் பதிவில் கூறியது.

51 வயதான திரு சுரேஷ் சுப்ரமணியம் என்ற அவர் கடந்த வியாழன் அன்று காலை 9.20 மணியளவில் பயனீர் கிரசண்டில் உள்ள தளவாட நிலையத்தில் பணியில் இருந்தபோது தாக்கப்பட்டதாக அது கூறியுள்ளது.

லாரி ஓட்டுநர் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும், அதனை தாம் குறிப்பிட்டு சொன்னதாகவும் அதற்காக தாக்கப்பட்டேன் என்றும் திரு சுரேஷ் சங்கத்திடம் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வாரத்தில் 4 நாள் வேலை; ஊழியர்கள் மிகுந்த ஆர்வம் – நிறுவனங்கள் தயாரா?

ஸ்பியர் செக்யூரிட்டி ஃபோர்ஸில் பணிபுரியும் திரு சுரேஷ், பின்னர் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.

மேலும் அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று மூன்று நாட்கள் விடுப்பில் சென்றார்.

இந்நிலையில், 38 வயதுடைய லாரி ஓட்டுநர் போலீஸ் விசாரணைகளில் உள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: வெளிநாட்டு ஊழியர்களே உஷார் – சிக்கிய பல்வேறு நாடுகளை சேர்ந்த 24 ஊழியர்கள்: சிங்கப்பூரில் இந்த தப்பை செய்யாதீங்க!

Related Articles

Back to top button