சிங்கப்பூரில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்த தமிழக ஊழியர்; விதிகள் மீறப்பட்டதே காரணம்!

விசாரணைக் குழு அறிக்கை!!

துவாஸில் உள்ள தொழிற்சாலையில் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நடந்த வெடிப்பில் 3 வெளிநாட்டு ஊழியர்கள் உயிரிழந்தனர்.

மூன்று ஊழியர்களைக் பலி வாங்கிய துவாஸ் விபத்தில், வெடித்த கலவை இயந்திரத்தை பாதுகாப்பாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யத் தவறியதால் இந்த கோர நிகழ்வு ஏற்பட்டது.

சிங்கப்பூரில் உயர லிஃப்டில் வேலை செய்துகொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர்கள்; திடீரெனெ அறுந்த கேபிள் – கதறிய ஊழியர்கள்

இந்த அறிக்கையை மார்ச் 25 – நேற்று வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் நியமித்த விசாரணைக் குழு வெளியிட்டது.

விசாரணைக் குழு அமைப்பு நிறுவனம் மீது குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வலுவாக பரிந்துரைத்துள்ளது.

அந்த நிறுவனம் – Stars Engrg, அதன் இயக்குனர் சுவா ஜிங் டா மற்றும் தயாரிப்பு மேலாளர் ல்வின் மோ துன் ஆகியோர் விதிகளை மீறியிருக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

Stars Engrg, திரு சுவா மற்றும் திரு ல்வின் ஆகியோரின் செயல்களில் குற்றங்கள் இருப்பதாக கமிட்டியின் தலைவர், மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியன் சன் குறிப்பிட்டதாக மனிதவள அமைச்சகம் (MOM) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்கள், இந்தியர்கள் தொடர்பான சிங்கப்பூர் நடப்புகள், Work pass, MOM தகவல், Travel தொடர்பான தகவல்களை மட்டும் தெரிந்துகொள்ள Tamil Daily Singapore-வுடன் இணைந்து இருங்கள்!

சிங்கப்பூரில் Work permit உடைய ஊழியர்களுக்கு என்ன தளர்வுகள்? – நுழைவு அனுமதி தேவையா?

விபத்து

கடந்த ஆண்டு பிப்ரவரி 24 அன்று நடந்த விபத்தில் 10 ஊழியர்கள் காயமடைந்தனர்,

அவர்களில் தமிழக ஊழியர் உட்பட 3 பேர் ஊழியர்கள் 90 சதவீத கடுமையான தீக்காயங்களால் பலியானார்கள்.

தமிழக ஊழியர் மாரிமுத்து

திரு மாரிமுத்து அந்நிறுவனத்தில் ஆறு வருடங்களுக்கும் மேலாக பணியாற்றினார்.

அவர் ஒரு நம்பக தன்மைவாய்ந்த சிறந்த ஊழியர் என்று அதன் நிறுவனர் கவலையுடன் கூறினார்.

மற்ற இருவர்

இந்த சம்பவத்தில் பலியான மற்ற இருவர் வங்கதேசம் நாட்டை சேர்ந்த ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Daily Singapore Telegram: https://t.me/tamildailysg

Breaking | சிங்கப்பூரில் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கான கோவிட்-19 விதிகள் தளர்வு – Detailed Report

Related Articles

Back to top button