தம் குடும்பத்தை எப்படியாவது முன்னேற்றிவிட வேண்டும் என வெளிநாட்டு வேலைக்காகச் சென்ற 200 தமிழர்கள் மரணம்

தன் குடும்பத்தை எப்படியாவது முன்னேற்றிவிட வேண்டும் என்ற ஒற்றை ஆசையுடன், கைநிறைய சம்பாதிக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் ஏராளம்.

சொந்த நாட்டில் போதுமான வருமானம் இல்லாமல், அப்படி பிழைப்புக்காக சென்ற தமிழ்நாட்டு ஊழியர்கள் படும் துயரம் சொல்லில் அடங்காது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளுக்கு சென்ற சுமார் 200 தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக நியூஸ் 18 தமிழ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்த அறிக்கை ஒன்றை, வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை, வெளிநாட்டுக்குச் வேலைக்காக சென்ற சுமார் 200 தமிழர்களின் உடல்கள் தமிழ்நாடு வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது கடந்த 2016-17ஆம் ஆண்டில் 48 உடல்களும், 2017-18ல் 75 உடல்களும் மேலும், 2018-19ல் 77 உடல்களும் தமிழ்நாடு கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

வெளிநாடு செல்பவர்கள் இந்தியத் தூதரகத்தின் முகவரி, தொடர்பு எண்ணை தெரிந்துகொள்வது அவசியம் என்று ஆணையகம் அறிவுறுத்தி உள்ளது.

Related Articles

Back to top button