பாஸ்போர்ட் இப்படி இருந்தா கண்டிப்பா சிறை தான்… சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து சிக்கிய ஊழியர்

சிங்கப்பூரில் இருந்து தமிழகம் வந்த ஊழியர் செய்த தவறான வேலை காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார்.

சிங்கப்பூரில் இருந்து ஒரு வாரத்துக்கு முன்னர் இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையம் வந்தது.

அதில் புதுக்கோட்டை கீழக்குறிச்சி பகுதியை சேர்ந்த 49 வயதான ஊழியர் துரைராஜ் பயணம் செய்து வந்தார்.

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஊழியர்; விமான நிலையத்திலேயே கைது – அவர் செய்தது என்ன?

இந்நிலையில் பயணிகளை குடிநுழைவு அதிகாரிகள் வழக்கம் போல சோதனை செய்தனர்.

அப்போது, துரைராஜ் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் 4 பக்கங்கள் கிழிக்கப்பட்டு இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.

இதைஅடுத்து அவரை அதிகாரிகள், ஏர்போர்ட் போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

இது பற்றிய விசாரணை நடந்து வருகிறது.

Related Articles

Back to top button