தெலோக் பிளாங்கா டிரைவ் சந்தை ஊழியர்களுக்கு கட்டாய COVID-19 பரிசோதனை

கடைக்காரர் ஒருவருக்கு COVID-19 தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று (ஜூன் 16) முதல் மூன்று நாட்களுக்கு தெலோக் பிளாங்கா டிரைவ் உணவு நிலையம் மூடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங் தெரிவித்துள்ளார்.

தொற்று பாதித்தவர், புக்கிட் மேரா வியூ சந்தை நோய்த்தொற்று குழுமத்தின் குடும்ப உறுப்பினர், மேலும் அவர் ஜூன் 13 அன்று தனிமைப்படுத்தப்பட்டார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் 20 மசாஜ் பார்லர்களை தற்காலிகமாக மூட உத்தரவு

இன்று காலை 9 மணியில் இருந்து, தெலோக் பிளாங்கா ஸ்டிரீட் 31 புளோக் 80Dஇல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் இன்று, அந்த உணவு நிலையம், சந்தை கடைக்காரர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு கட்டாய COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 24 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு – 3 பேருக்கு தொடர்பு கண்டறியப்படவில்லை

Related Articles

Back to top button