சிங்கப்பூரில் கடுமையான கட்டுப்பாடுகள் – டாக்சி, தனியார் வாடகைக் கார்களுக்கு கட்டுப்பாடு

சிங்கப்பூரில் கடுமையான COVID-19 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், டாக்சிகள் மற்றும் தனியார் வாடகைக் கார்களில் இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

இதனை நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) நேற்று ஞாயிற்றுக்கிழமை (மே 16) தெரிவித்தது.

ஒரே வீட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அது கூறியுள்ளது.

உதாரணமாக, பெற்றோர் தனது இரண்டு குழந்தைகளுடன் ஒன்றாக வாழ்ந்தால் அவர்கள் தாராளமாக பயணம் செய்யலாம் என LTA குறிப்பிட்டுள்ளது.

சமூகத்தில் COVID-19 பரவல் அதிகரித்த பின்னர், சிங்கப்பூர் தற்போது 2ஆம் கட்டத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடுமையான இந்த கட்டுப்பாடுகள் ஜூன் 13 வரை நீடிக்கும்.

கிராப்ஹிட்ச் (GrabHitch) மற்றும் ரைட்பூல் (RydePool) போன்ற அனைத்து வர்த்தக கார் பகிர்வு சேவைகளும், வரும் ஜூன் 13 வரை தடைசெய்யப்படும் என்றும் அது கூறியுள்ளது.

Related Articles

Back to top button