ட்ரேஸ் டுகெதர் கருவியை ஒருமுறைக்கு மேல் தொலைத்தால் மீண்டும் பெற கட்டணம்

ட்ரேஸ் டுகெதர் (TraceTogether) கருவிகளை ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொலைத்தவர்கள் புதிய கருவியை பெற S$9 கட்டணத்தை செலுத்த வேண்டும்.
இதை ஸ்மார்ட் நேஷன் மற்றும் டிஜிட்டல் அரசாங்க அலுவலகம் (SNDGO) நேற்று (ஜூன் 3) பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது – மனிதவள அமைச்சகம்
பொதுமக்கள் தங்கள் மாற்று கருவிகளை எந்த சமூக மையத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
நிதி நெருக்கடியில் உள்ளவர்கள், கட்டண தள்ளுபடிக்காக மையத்தில் உள்ள ஊழியர்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
தொலைத்த கருவிகளை முதல்முறை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும், ஒருமுறைக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டது.
ஆனால், SNDGO அப்போது அதற்கான மாற்று கட்டணத்தை கூறவில்லை, தற்போது அதற்கான கட்டணம் என்ன என்பது வெளியாகியுள்ளது.
TokenGoWhere வலைத்தளத்தின்படி, பேட்டரி தீர்ந்துவிட்ட அல்லது பழுதடைந்த கருவிகள் இலவசமாக மாற்றி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : யிஷுன் பிளாக்கில் வசிப்பவர்களுக்கு கட்டாய COVID-19 சோதனைகள் முடிந்தது – 3 பேருக்கு தொற்று