வெளிநாட்டு ஊழியர்களை லாரிகளில் அல்லாமல் பேருந்துகளில் கொண்டுசெல்வதில் உள்ள சிக்கல்கள்

ஊழியர்களை ஏற்றிச்செல்ல லாரிகளைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து போக்குவரத்து அமைச்சகம் மறுஆய்வு மேற்கொண்டு வருவதாக மூத்த போக்குவரத்து அமைச்சர் எமி கோர் தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 10) நாடாளுமன்றத்தில் பேசிய டாக்டர் கோர் கூறியதாவது: “உலக அளவில், நடைமுறைகள் மாறுபட்டவை. கனடா, தாய்லாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மற்றும் சில கட்டுப்பாடுகள் இருந்தாலும் சாலைகளில் பயணிக்கும் சரக்கு வாகனங்களின் பின்புறம் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கின்றன.”

இதையும் படிங்கசிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரித் தள்ளுபடி அதிகரிப்பு

“சாலை பாதுகாப்பு குறித்த பார்வையில், லாரிகள் எந்தவொரு பயணிகளையும் ஏற்றி செல்லக்கூடாது என்பது நியாயமாக இருக்கும்.”

ஆனால், இதில் குறிப்பிடத்தக்க நடைமுறை மற்றும் செயல்பாட்டு சிக்கல்கள் உள்ளன என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில், நிறுவனங்கள், குறிப்பாக கட்டுமானத் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை லாரிகளில் தொடர்ந்து கொண்டு செல்ல அனுமதிக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், பேருந்தில் ஏற்றிச் செல்ல கணிசமாக அதிக செலவுகள் ஏற்படும் என்று தொழில்துறை சங்கங்கள் வலுவான கருத்துக்களை முன்வைப்பதாக அவர் கூறினார்.

எனினும் தொடர்ந்து அதன் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை அரசாங்கம் மேம்படுத்தும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இதையும் படிங்கஒர்க் பாஸ் அனுமதிக்கான புதிய விண்ணப்பங்களை சிங்கப்பூர் ஏற்காது!

Related Articles

Back to top button