சிங்கப்பூரில் கனமழை: லாரி மீது முறிந்து விழுந்த பெரும் மரம் – லாரி ஊழியர்களின் நிலை?

சிங்கப்பூரில் பெய்த கனமழை காரணமாக லாவெண்டர் MRT நிலையம் அருகே Horne சாலையில் இருந்த லாரி மீது மரம் விழுந்தது.
நேற்று புதன்கிழமை (அக். 5) காலை ஏற்பட்ட இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தின் புகைப்படம் மற்றும் வீடியோவைப் ஸ்டாம்ப் செய்தி தளம் பகிர்ந்துள்ளது.
அந்த லாரி வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரி போன்று தெரிகிறது. நல்வாய்ப்பாக யாருக்கும் ஏதும் ஏற்படவில்லை என்பதில் பெரும் மகிழ்ச்சி.
சுமத்ரா சூறாவளியால் ஏற்பட்ட கனமழையின் போது அக். 5 காலை 7.20 மணியளவில் விழுந்த மரம் குறித்து எச்சரிக்கை வந்ததாக NParks கூறியது.
பின்னர், காலை 10 மணியளவில் சாலையை தடுத்து கிடந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது.