சிங்கப்பூரில் தொடரும் ஊழியர் மரணம் – லாரி மோதி பரிதாபமாக பலியான ஊழியர்

சிங்கப்பூரில் மேலும் ஒரு ஊழியர் மரணமடைந்ததாக நமக்கு தகவல் வந்துள்ளது.
லிம் சூ காங்கில் லாரி மோதியதில் 72 வயதான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் உயிரிழந்தார்.
இந்த விபத்து ஆகஸ்ட் 16 அன்று சீவ்ஸ் அக்ரிகல்ச்சருக்கு சொந்தமான 150 நியோ டைவ் சாலையில் அமைந்துள்ள பண்ணையில் காலை 7.30 மணியளவில் நடந்தது.
அந்த பண்ணையில் பணிபுரிந்த போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர், வாகனத்தில் முற்பகுதியில் அடிபடுவதற்கு முன், லாரியின் இடதுபுறமாக நகர்ந்துள்ளார் என WSH கவுன்சில் தெரிவித்துள்ளது.
அவர் இடதுபுறத்தில் தான் இருக்கிறார் என்று லாரியை திடீரென முன்னோக்கி ஒட்டியதில் அவர் முன்னே வந்ததை ஓட்டுநர் கவனிக்கவில்லை. இதனால் லாரி ஊழியர் மீது மோதியது.
அதனை தொடர்ந்து அவர் விரைவாக கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால், அவருக்கு விபத்தினால் ஏற்பட்ட கடும் காயம் காரணமாக மருத்துவமனையிலேயே இறந்தார் என்று மனிதவள அமைச்சகம் (MOM) கூறியுள்ளது. அவர் சிங்கப்பூர் நாட்டவர்.
விசாரணைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் 33 வேலையிட விபத்துகள் நடந்தது. பங்களாதேஷ் ஊழியர் கடலில் மூழ்கி இறந்ததுடன் அந்த எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.
தொடரும் ஊழியர்களின் மரணம் அனைவரையும் பெரும் அச்சத்தில் வைத்துள்ளது.
சிங்கப்பூர் கடலில் விழுந்து காணாமல் போன வெளிநாட்டு ஊழியர்; இரு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு