சிங்கப்பூர்: முறிந்து விழுந்த பெரிய மரம் – அடியில் சிக்கி கதறிய இருவர் – விரைந்து சென்று உயிரை காப்பாற்றிய SCDF படை

சிங்கப்பூர்: கிம் மோ சாலையில் உள்ள உலு பாண்டன் சமூக மன்றத்தில் நின்ற பெரிய மரம் விழுந்ததில் இரண்டு பேர் சிக்கி கொண்டனர்.
மேலும், ஆடவர் மரத்தின் அருகே காயமடைந்த நிலையில் இருந்ததாகவும் நமது வாசகர் தகவல் கூறியுள்ளார்.
அவர்கள் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்கள் உடல் நிலை நன்றாக இருந்ததாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF) தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நேற்று மாலை 5.55 மணியளவில் தகவல் கிடைத்தது என்றும் SCDF படை கூறியுள்ளது.
மரம் வெட்டும் கருவிகள் மூலம் விழுந்த மரத்தை வெட்டும்போது முக்கிய அறிகுறிகளைக் கண்காணிக்க அதன் அவசர மருத்துவ நிபுணர்கள் அந்த இடத்தில் இருந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாராவது இருக்கிறார்களா? என்பதைச் சரிபார்க்க K9 தேடல் நாய்கள் பயன்படுத்தப்பட்டன.