சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது – மனிதவள அமைச்சகம்

சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்கான வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து குறைந்து வருவதாக மனிதவள அமைச்சகம் (MOM) இன்று (ஜூன் 3) தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை சூழ்நிலை தொடர்ந்து மேம்பட்டதாக சிங்கப்பூரில் வேலையின்மை குறித்த ஏப்ரல் அறிக்கையில் MOM கூறியது.
இதையும் படிங்க : யிஷுன் பிளாக்கில் வசிப்பவர்களுக்கு கட்டாய COVID-19 சோதனைகள் முடிந்தது – 3 பேருக்கு தொற்று
குடிமக்களின் வேலையின்மை விகிதம் 0.1 சதவீதம் குறைந்து 4.1 சதவீதமாகவும், சிங்கப்பூர் குடியிருப்பாளர்களின் விகிதம் 4 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக, வேலையின்மை விகிதம் 2.9 சதவீதமாக மாறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில், ஏப்ரல் மாதத்தில் 82,800 குடிமக்கள் உட்பட 92,100 குடியிருப்பாளர்கள் வேலையில்லாமல் உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பாளர்கள் என்பது சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களைக் குறிக்கிறது.
இதையும் படிங்க : கனரக வாகனம், சைக்கிள் மோதி விபத்து – சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்