அப்பர் சாங்கி சாலையில் பைக்கின் மீது கார் மோதி விபத்து – சாலை ஓரத்தில் தூக்கி வீசப்பட்ட ஓட்டுநர் (காணொளி)

அப்பர் சாங்கி சாலையில் நேற்று சனிக்கிழமை (ஜூன் 26) மாலை, கார் ஒன்று மின்-பைக்கில் மோதியது.

அன்று மாலை 6:29 மணியளவில், 452 அப்பர் சாங்கி சாலையில் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சைனாடவுனில் உள்ள இரண்டு உணவகங்களை மூட உத்தரவு

இந்த சம்பவத்தின் காணொளி, SG Road Vigilante என்னும் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.

வலது புறமாக திரும்பிய மின்-பைக்கின் மீது கார் வேகமாக சென்று மோதியதை அந்த காணொளி காட்டுகிறது.

அதன் பின்னர், ஓட்டுநர் சாலை ஓரத்தில் தூக்கி வீசப்படுவதை காணமுடிகிறது.

இதில், 34 வயதான ஓட்டுநர் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மேலும், காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.

சிங்கப்பூரில் கோவிட்-19 காரணமாக மேலும் ஒருவர் மரணம்

Related Articles

Back to top button