சிங்கப்பூரில் இந்திய ஊழியர் பாதிப்பு – 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு பரிசோதனை!

சிங்கப்பூரில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்துள்ளது.

இதனை போக்குவரத்து அமைச்சர் ஓங் யே குங் நேற்று (ஏப்ரல் 14) பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

சமீபத்தில், தடுப்பூசி போடப்பட்ட இந்திய ஊழியர் ஒருவர் COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டார்.

ஊழியரின் நெருங்கிய தொடர்புகளில் இருந்த 156 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் முடிவு வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் நாள் முடியும்போது மீண்டும் அவர்கள் அனைவரும் சோதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 வயதான இந்திய ஊழியர், சீஃப்ரண்ட் சப்போர்ட் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.

மேலும், அவர் பிரானி டெர்மினல் அவென்யூவில் அமைந்துள்ள தங்கும் விடுதியில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button