“தடுப்பூசியானது நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும் மிக சிறந்த நடவடிக்கை” – ஆய்வு

குழந்தை பருவத்திற்குப் பிறகு, நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் போடப்படும் தடுப்பூசியானது, தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க உதவும் மிக சிறந்த நடவடிக்கைகளில் ஒன்றாகும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடாத நிலையில், உடலின் நோயெதிர்ப்பு செயல்பாடுகள் பலவீனமடைந்து, குறிப்பிட்ட வயதிலேயே காய்ச்சல் மற்றும் நிமோனியா போன்ற தொற்று நோய்களுக்கு அது அதிக வாய்ப்பை ஏற்படுத்தும். இது மற்ற மருத்துவ சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

வேண்டுமென்றே அத்துமீறி பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்த சந்தேகத்தின்பேரில் 11 பேர் கைது

நோய்களைத் தடுத்து நம்மை காப்பதில் தடுப்பூசிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தபோதிலும், தென்கிழக்கு ஆசியாவில் மனிதனுக்கு கிடைக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் உலகின் பிற பகுதிகளை விட பின்தங்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த 75 சதவீத நோய்த்தடுப்பு இலக்கானது அங்கு கணிசமாகக் குறைவு என்று (ஜூன் 29) வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

உதாரணமாக, சிங்கப்பூரின் இன்ஃப்ளூயன்ஸா தடுப்பூசி விகிதம் 14 சதவீதமாக மட்டுமே உள்ளது, இது பிரிட்டனில் 75 சதவீதமும் தென் கொரியாவில் 83 சதவீதமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சகோதரியை கொலை செய்ததாக சகோதரர் மீது குற்றச்சாட்டு

Related Articles

Back to top button