சிங்கப்பூரில் போலீஸ் வேன், லாரி மோதி விபத்து – 11 லாரி பயணிகள் காயம்

ஜலான் புரோ மற்றும் ஜுராங் போர்ட் சாலை சந்திப்பில் போலீஸ் வேன் மற்றும் லாரி மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் சிக்கிய 17 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான வரித் தள்ளுபடி அதிகரிப்பு
அதில் லாரியில் பயண செய்த 11 பேர், லாரி ஓட்டுநர் மற்றும் 5 காவல் அதிகாரிகள் ஆகியோர் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கடந்த மே 7 இரவு 9.02 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
20 முதல் 44 வயதுக்குட்பட்ட அவர்கள் அனைவரும் சிறு காயங்களுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
காவல்துறை விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: ஒர்க் பாஸ் அனுமதிக்கான புதிய விண்ணப்பங்களை சிங்கப்பூர் ஏற்காது!