சிங்கப்பூரில், வேனை தவறாக ஓட்டி வடிகாலில் தள்ளிய சிறுமி..!

சிங்கப்பூரில் 13 வயது சிறுமி ஒருவர் வேன் உள்ளே சென்று, தவறான கியரை செலுத்தி, பின்னர் வேனின் வேகத்தை அதிகப்படுத்தி, இறுதியாக வேனை வடிகாலில் செலுத்தியுள்ளார்.
இந்த விபத்தானது கடந்த ஜூன் 23 அன்று மதியம், பிளாக் 40 தெலோக் பிளங்கா ரைஸுக்கு முன்னால் உள்ள கார் பார்க்கிங்கில் நிகழ்ந்துள்ளது.
சிங்கப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் அடிவாரத்தில் இறந்து கிடந்த பெண்!
இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது 15 வயதான ரானியா என்ற டீனேஜ் பெண், வேன் தனது மாமாவுக்கு சொந்தமானது என்றும் வேனியில் இருந்து எதையோ எடுக்குமாறு தனது சகோதரியிடம் மாமா சொன்னதாகவும், ஆனால் ரானியாவின் சகோதரி வேனின் சாவியை இவர்களது தோழியான 13 வயது சிறுமியிடம் கொடுத்ததாகவும், அந்த சிறுமி வேனில் ஏறி என்ஜினை ஸ்டார்ட் செய்து வாகனத்தை தவறாக செலுத்தியுள்ளார்.
இதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி நகர்ந்தது. பின்னர் வேன் வடிகாலில் விழுந்து, அதன் பின்புறம் சேதமடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளரிடம் ரானியா தெரிவித்ததாவது; அந்த சிறுமி பின்னோக்கி விழுந்ததாகவும், வேன் கால்வாயில் செல்லும் வரை சிறுமியால் நிறுத்த முடியவில்லை எனவும், வேனின் பின்புறம் வடிகாலில் சிக்கியதும் அவள் காரில் இருந்து வெளியேற முற்பட்டதாகவும், இருப்பினும் சிறுமிக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.
விபத்துக்குப் பிறகு, ரானியாவின் சகோதரி, அந்த சிறுமி மற்றும் அவர்களது குடும்பத்தினர் அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் அளித்தனர்.
இரண்டு சகோதரிகளின் மாமாவான வேனின் உரிமையாளர் குமார் (40), அவரது மருமகள் சொன்னதை உறுதிப்படுத்தினார். அவர்கள் அனைவரும் குழந்தைகள், அதனால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை எனவும், விபத்து குறித்து தெரியவருவதற்கு முன் மாலை 3 மணியளவில் போக்குவரத்து காவலரிடமிருந்து தனக்கு ஒரு அறிவிப்பு வந்ததாக அவர் தெரிவித்தார்.
அதனை அடுத்து, இரண்டு லாரிகள் மூலம் வேனை மேலே கட்டி இழுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 5 பேர் கைது