புருணை, மலேசியா, இந்தோனேசியாவிற்கு விவியன் பாலகிருஷ்ணன் பயணம்

சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் இன்று (மார்ச் 22) புருணை சென்றுள்ளார். அதன் பிறகு அவர் மலேசியா மற்றும் இந்தோனேசியாவுக்கு பயணம் மேற்கொள்வார்.
டாக்டர் பாலகிருஷ்ணன், புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவை சந்திப்பார், மேலும் புருனேயின் இரண்டாவது வெளியுறவு அமைச்சர் எரிவான் பெஹின் யூசோஃப் உடன் மதிய உணவில் கலந்துகொள்வார்.
இந்த தகவல்கள் அனைத்தையும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் தன்னுடைய செய்திக்குறிப்பில் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளது.
டாக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் திரு எரிவான் ஆகியோர் தங்கள் சந்திப்பின் போது, புருனேயின் தலைமையின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பில் ஆசியானின் பங்கு குறித்து விவாதிப்பர் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய மியான்மர் சூழல் ஆழ்ந்த கவலைக்குரியது என்றும், மேலும் ஆக்கபூர்வமான உரையாடலின் மூலம் அமைதியான தீர்வைப் பெற மியான்மரில் உள்ள அனைத்து தரப்பினரையும் அவர்கள் வலியுறுத்தியதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.