சிங்கப்பூரில் கொரோனா பற்றி தவறாக பரப்பப்படும் போலியான தகவல்கள் – எச்சரிக்கை

சிங்கப்பூரில், அண்மையில் வாட்ஸ் ஆப் வழியாக பொய்யான தகவல்கள் பல பரப்பப்படுவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த போலியான தகவலின்படி, கொரோனாவால் இறந்த ஒருவருக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் கிடைத்த பல உண்மைகள் மூலம் கொரோனாவிற்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் மாற்றி உள்ளதாகவும் கூறப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில், ஊழியர்களை பணியமர்த்துவதில் சிரமத்தை சந்திக்கும் பத்தில் 6 நிறுவனங்கள்
மேலும் அந்த போலியான தகவலில், தற்போது நேர்ந்து வரும் இழப்புகள் ஒரு கதிர்வீச்சால் மரபணு மாற்றம் அடைந்த பாக்டீரியாவால் ஏற்படுகிறது எனவும், அது உடலில் உள்ள இரத்தம் முழுவதையும் உறிஞ்சி மரணத்தை ஏற்படுத்தும் எனவும் பொய்யாக தகவல் பரப்பப்படுகிறது.
கொரோனா தொற்று என்பது போலியான ஒன்று, அது உலகத்தாரால் நடத்தப்படும் நாடகம் என உள்ளூர் மருத்துவர்கள் கூறுவதாகவும், வெறும் ஆன்டிபையோட்டிக்ஸ் கொண்டே அந்த பாக்டீரியா தொற்றை சரி செய்துவிடலாம் என உண்மைக்கு மாறான தகவல்கள் பரப்பப்படுவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.
அந்த போலி தகவலின்படி, எந்த பிரேத பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், சிகிச்சை முறைகள் மாற்றி அமைக்கப்படவில்லை எனவும், இது போன்ற போலியான வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை மக்களை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக ஒருவர் மரணம்