சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழ் பணிப்பெண்; ஊழியருடன் முதலாளி வீட்டில் உல்லாசம் – கையும் களவுமாக பிடித்த முதலாளி

சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த தமிழ் பணிப்பெண் செய்த காரியத்தை கண்டு உடைந்து போன முதலாளி அவரை சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்பி விட்டார்.

முதலாளியின் வீட்டிலேயே ஊழியருடம் உடலுறவு கொண்ட அந்த பணிப்பெண்ணை கையும் களவுமாக பிடித்த முதலாளி, அவர் மீது வைத்திருந்த நம்பிக்கைக்கு மிக பெரும் துரோகம் என்று வேதனை அடைந்தார்.

இந்தியருக்குன்னு கெத்து இருக்கு – சிலரால் அதற்கு களங்கமும் ஏற்படுகிறது: சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை

இதனை அடுத்து அவர் போலீசில் புகார் கொடுக்க அங்கு வந்த போலிஸ் அதிகாரிகள் ஊழியரை கையோடு கைது செய்து அழைத்து சென்றனர்.

பிளாக் 107A கான்பெர்ரா தெருவில், தனது கணவர் மற்றும் நான்கு வயது மகனுடன் ஷாலினி என்ற முதலாளி நான்கு அறைகள் கொண்ட வீட்டில் வசித்து வருகிறார்.

அந்த தமிழ் பணிப்பெண் அவர்களுடன் மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருவதாகவும், தனது சொந்த வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நினைக்கவில்லை என்றும் அவர் கவலையுடன் கூறினார்.

பொதுவாக, அவர்கள் வீட்டில் ஆட்கள் எப்போதும் இருப்பார்கள், ஆனால் அன்றைய தினம் ஷாலினியின் கணவர் சில வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார், ஷாலினி கோவிலுக்குச் சென்று இருந்துள்ளார்.

அன்று பணிப்பெண்ணுக்கு விடுமுறை நாள் என்பதால் உறங்க சொல்லிவிட்டு சென்றுள்ளார் ஷாலினி, ஆனால் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது முக்கியமான அறையில் வேறொரு ஆணுடன் அவர் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் போலீசில் புகார் அளித்து, ஊழியரை போலீசில் பிடித்து கொடுத்து, பணிப்பெண்ணை உடனே சொந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

என் நம்பிக்கைக்கு அந்த பெண் செய்த மிக பெரிய துரோகம் என ஷாலினி மனமுடைந்து போனார்.

சிங்கப்பூரில் வாரத்தில் நான்கு நாள் வேலை? – ஊழியர்களுக்கு சம்பளம் குறையுமோ என அச்சம்

Related Articles

Back to top button